நடிகர் அஜித்குமார் நேற்று திடீரென கமிஷனர் அலுவலகத்திற்கு ஏன் வந்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகர் அஜித் வந்துள்ளார். அவர் முக கவசத்துடன், அரைக்கால் சட்டை, டீ சர்ட் அணிந்து வாடகை காரில் வந்ததால் அவரை யாராலும் நடிகர் அஜித் என்று கண்டுகொள்ள முடியவில்லை. அதன்பின் நடிகர் அஜித் என்று போலீசார் அனைவருக்கும் தெரிந்தவுடன் பெரும் பரபரப்பு நிலவியது. நடிகர் அஜீத் அங்கு காவலுக்கு நின்றுகொண்டிருந்த போலீசாரிடம் ‘ரைபிள் கிளப்’ எங்கே உள்ளது என்று விசாரித்தார். உடனே அங்குள்ள போலீசார் அனைவரும் அஜித்தை சுற்றி நின்றனர்.
அதன்பின் தான் எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்திற்கு சென்று அங்குள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களை பார்ப்பதற்காக வந்தேன் என்றும் அவரிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுப்பதாகவும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். எனவே வாடகை கார் ஓட்டுநர் பழைய கமிஷனர் அலுவலகத்திற்கு பதிலாக புதிய கமிஷனர் அலுவலகம் வந்துவிட்டேன் என்று கூறினார். பின்பு அஜித் ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருக்கிறார். எனவே துப்பாக்கி சுடும் பயிற்சியில் அங்கே வந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்று கூறிவிட்டு அங்கிருந்து நடிகர் அஜித் சென்றுவிட்டார். சமூக வலைத்தளங்களில் இத்தகவல் வைரலாக பரவியது.