Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கட்டுப்பாட்டை மீறி வெளியே போனால்…. இப்படி தான் பண்ணனும்….. கமிஷனரின் அதிரடி உத்தரவு….!!

வேலூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கமிஷனர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் காமராஜர் சிலை அருகில் உதவி கமிஷனர் பாலு தலைமையிலான, சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து சமூக இடைவெளி இன்றி கூடுதலாக பயணிகளை ஏற்றி வருதல் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை காவல்துறையினர் தடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்பின் முழு ஊரடங்கை கடை பிடிக்காதவர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர். இதுபோன்று தளர்த்தப்பட்ட கட்டுப்பாட்டுகளை மீறிய 135 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |