நடப்பு ஆண்டு சிறிய பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி பார்வையாளர்களை கவர்ந்த தமிழ் திரைப்படங்கள் பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்வோம். முதலாவதாக சாய்பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த “கார்கி”திரைப்படம் சிறு பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த இப்படத்தை, கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். 2வதாக கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, பிரபாகர், உமாரியாஸ் கான், இனியா போன்றோர் நடித்திருந்த “ஆதார்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ராம்நாத் பழனிக்குமார் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3-வதாக மலையாளத்தில் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற விக்ருதி திரைப்படத்தின் ரீமேக்தான் “பயணிகள் கவனிக்கவும்”. இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 4வதாக கேடி என்ற கருப்புத்துரை படத்தில் நடித்த மு.ராமசாமி நடிக்கும் “வாய்தா” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை இயக்குனர் மதிவர்மன் இயக்கி இருந்தார். 5-வதாக இந்தியாவில் அனுதினமும் நடைபெற்று வரும் மலக்குழி மரணங்களை கேள்வி கேட்கும் திரைப்படமாக உருவானது தான் “விட்னஸ்”. இத்திரைப்படத்தில் ரோகினி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தை தீபக் இயக்கி இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.