மிக கம்மியான வட்டியில் தனிநபர் கடன் பெறுவதற்குரிய வழிமுறைகள் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். அந்த வகையில் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பாக ஆன்லைனில் பல கடன் வழங்குபவர்களின் வட்டி விகிதங்களை சரி பார்த்து ஒப்பீடு செய்த பிறகே, கடன் பெறவேண்டும். இதற்கிடையில் ஆன்லைன் நிதிச் சந்தைகளானது சிறந்த கடன் வழங்குவோரின் தனிப்பட்ட கடனுக்கான வட்டி விகிதங்களை காட்டுகிறது.
வாடிக்கையாளரின் முந்தைய செயல் நடவடிக்கைளை பொறுத்துதான் கம்மியான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. முன்னதாக நீங்கள் வாங்கிய கடன் தொகையை எவ்வளவு விரைவாக மற்றும் கால தாமதம் இன்றி செலுத்தி இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து வங்கிகள் உங்களுக்கு குறைந்தவட்டி விகிதங்கள் உடனான கடன்களை வழங்குகிறது.
அதன்பின் உங்களது கிரெடிட் ஸ்கோரானது அதிகளவு இருப்பின் குறைந்த தனி நபர் கடன் வட்டி விகிதத்தைப் பெறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. அதேபோல் கிரெடிட் ஸ்கோரானது 750-க்கு மேல் இருப்பின் நல்ல வட்டியில் தனி நபர் கடனை பெற்றுக்கொள்ளலாம்.