Categories
பல்சுவை

கம்மியான ரேட்ல ஸ்மார்ட்போன் வாங்க ஆசையா?… பிளிப்கார்டின் அதிரடி சலுகை…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பிளிப்கார்டு நிறுவனமானது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. அதன்படி ஐபோன் 13 ஸ்மார்ட் போனை பிளிப்கார்டு மிக கம்மியான விலையில் விற்பனை செய்கிறது. மேலும் 5G மொபைல்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் 13ஐ ரூபாய்.69,990-க்கு விற்பனை செய்கிறது. இதற்கிடையில் பிளிப்கார்ட்டில் ரூபாய்.7,991 வரை தள்ளுபடியை பெறலாம். ஆப்பிள் நிறுவனம் தன் பழைய மொபைலுக்கு கூட அப்டேட்டுகளை வழங்குகிறது.

இருப்பினும் இந்த மொபைலின் கேமரா அவ்வளவு சிறப்பாக இல்லை என கூறப்படுகிறது. அதே நேரம் சாம்சங் கேலக்சி எஸ்22+ சிறந்த கேமரா அனுபவத்தை தருவதாக கூறப்படுகிறது. இந்த பிளாக்ஷிப் மொபைல் மிக கம்மியான விலையில் விற்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலையானது ரூபாய்.69,999-க்கு விற்கப்படுகிறது. பெடரல் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது. ரூபாய்.43,999-க்கு விற்கப்பட்ட பிக்சல் 6ஏ மொபைல் பிளிப்கார்டு இயர் எண்ட் விற்பனையில் சிறந்த தள்ளுபடியை பெறுகிறது.

இதன் விலை ரூபாய்.29,999 ஆக குறைந்திருக்கிறது. ரூபாய்.30,000 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ எட்ஜ் 30 மொபைல் பிளிப்கார்டு தள்ளுபடியில் உங்களுக்கு ரூபாய்.22,999-க்கு கிடைக்கிறது. குறைந்த விலையில் 5G மொபைலை வாங்க விரும்புபவர்களுக்கு சாம்சங் கேலக்சி எப்23 மொபைல் சிறந்த தேர்வாக இருக்கும். இதனுடைய விலை ரூபாய்.14,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரம் பெடரல் வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்துவோர் ரூபாய்.13,499-க்கு வாங்கலாம்.

Categories

Tech |