மிகவும் குறுகிய காலத்திலேயே சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால் அக்கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் சேர்வதற்கு ஆர்வமாக உள்ளதாக நடிகர் ஜாக்கி சான் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சீனாவின் திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் நடிகர் ஜாக்கிசான் பெய்ஜிங்கில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மிக குறுகிய காலத்திலேயே தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக நடிகர் ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி சீன குடிமகனாக இருப்பதில் தான் பெருமிதம் கொள்வதாகவும், தன் நாட்டின் தேசியக் கொடிக்கு உலகம் முழுவதும் மரியாதை கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சீனா கடந்த சில வருடங்களில் மிக வேகமான முன்னேற்றத்தை அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடிகர் ஜாக்கி சான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.