மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கட்சி பெருமாள் பகுதியில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக அருண் குமாரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு அப்பகுதியில் நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.