கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த வியாழக்கிழமையிலிருந்து பெய்த கனமழையால் தென்மேற்கு பகுதியிலிருக்கும் 6 மாவட்டங்கள் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள், வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சாலைகள், வயல்கள், வீடுகள் போன்ற இடங்களை மழைநீர் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு அந்நாட்டில் பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் 5000 பேர் தங்களுடைய இடத்தைவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.