கானா வாழையின் மருத்துவகுணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
கானாவாழை இதனை பெரும்பாலும் கிராமபுறத்தில் வாழும் மக்கள் அறிந்திருப்பர். ஆனால் நகர்ப்புறங்களில் வாழ்வோருக்கு இது பற்றி தெரியாது. கானா வாழை பொதுவாக ஈரமான பகுதிகளில் தானாகவே வளரக்கூடியது. சிறப்பான தாம்பத்தியத்துக்கு பெரிதும் உதவக்கூடியது கானா வாழை.
கானா வாழையுடன் முருங்கைப் பூ, துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து கூட்டு வைத்து கொள்ளுங்கள். பின் நெய் கலந்த சாதத்தோடு கூட்டு சேர்த்து 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பலன் ஏற்பட்டு தாம்பத்யம் செழிக்க உதவும். புத்துணர்வை தரும். ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்து.