வங்கிக்கு பணம் எடுக்க சென்ற மாணவி காணாமல் போன சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருக்காலகுறிச்சி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லாத்தூரில் இருக்கின்ற வங்கியில் பணம் எடுக்க சென்ற மாணவி வீட்டிற்கு திரும்ப வரவில்லை.
இதனையடுத்து மாணவியை உறவினர் மற்றும் தோழி வீடுகளில் பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த மாணவியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.