கனடாவிலிருக்கும் New Widetech எனும் நிறுவனத்தின் தயாரிப்பான deHumidifier மின்சாதனம் அந்நாட்டின் 2 இடங்களில் தீ பற்றியதால் சுமார் 2.5 மில்லியன் deHumidifier களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப பெறுமாறு கனட சுகாதாரத்துறை அந்நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.
கனடா நாட்டிலுள்ள New Widetech என்னும் நிறுவனத்தின் தயாரிப்பான காற்றின் ஈரப்பதத்தை குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் Dehumidifier 2 இடங்களில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து இந்த நிறுவனத்திடம் கனடாவின் சுகாதாரத்துறை சுமார் 2.5 மில்லியன் Dehumidifier களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் New widetech நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தங்கள் நிறுவனத்திடமிருந்து demudifier களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதனை தங்களுடைய நிறுவனத்திடமே ஒப்படைத்து விட்டு அதற்கான தொகையை திரும்ப வாங்கிகொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.