Categories
உலக செய்திகள்

கனடா குடிமகன் செய்த செயல்…. மரண தண்டனை கொடுத்த சீனா….!!

சீனாவில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கனடா குடிமகனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.

சீனாவில் Guangzhou என்ற நகரில் வசிக்கும் xu weihong மற்றும் wen guanxiong என்ற இரு நபர்களும் கடந்த‌ 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து போதைப்பொருள் தயாரித்து வந்துள்ளனர். அதனை அறிந்த காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் இருவரின் வீட்டில் இருந்தும் 120 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அந்த போதைப்பொருள் கொட்டமைன் என்கின்ற மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் என்ற காரணத்தால் போதைப்பொருள் தயாரித்த இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து சீனாவின் Guangzhou நகரில் நடந்த நீதிமன்ற விசாரணையில், குற்றவாளி xu weihong என்ற நபருக்கு மரண தண்டணையும்  அவருடைய கூட்டாளி wen guanxiong என்ற நபருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

 

இதுபற்றி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் wang wenbin கூறுகையில், ‘சீனாவின் நீதிமன்ற அதிகாரிகள் சீன சட்டத்திற்கும் சட்ட நடைமுறைகளுக்கும் ஏற்றவாறு இந்த வழக்கை மிகவும் கவனமாக கையாளுகிறார்கள் என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். மேலும் இந்த வழக்கிற்கும் தற்போதைய சீனா மற்றும் கனடா உறவுகளுக்கு இடையில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. இந்த குற்றவாளிகளுக்கு வழங்கியுள்ள மரணதண்டனை மூலமாக பல்வேறு குற்றங்களை தடுக்க முடியும்’ என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |