மூன்றாவது முறையாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி அமைக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
கனடாவில் மூன்றாவது முறையாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி அமைக்கப்போகிறார். இவர் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை சரிசெய்வதிலும் தனது முழு கவனத்தை செலுத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும் வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி பாராளுமன்றம் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னரே அமைச்சர்களின் பட்டியலை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமரின் அலுவலகம் எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “அடுத்த வார துவக்கத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ட்ரூடோ தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசவுள்ளார். அதில் கனடா மக்களின் முன்னுரிமைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்மொழிவார் என்றும் தெரியவந்துள்ளது.