வீடின்றி இருக்கும் மக்களுக்காக ரொறொன்ரோ மாகாண நிர்வாகத்திடம் உதவி வழங்கும் அமைப்பு ஒன்று கோரிக்கை வைத்துள்ளது.
கனடாவிலுள்ள ரொறொன்ரோ மாகாணத்தில் இந்த மாதத்திலிருந்து குளிர்காலம் தொடங்க உள்ளது. இதனால் மக்கள் பலர் இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில். வீடின்றி தவிக்கும் சமூகத்தினர் தங்களுக்கு தேவையான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று ரொறொன்ரோ மாகாண நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் The Shelter Housing Justice Network என்ற அமைப்பு வீடற்ற சமூகத்தினரின் தரப்பில் இருந்து கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று காலக்கட்டத்தில் வீடின்றி வசித்தவர்களுக்கு வழங்கிய அதே இருப்பிடங்களை தொடர்ந்து வழங்குமாறு அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.