Categories
உலக செய்திகள்

ஆட்சி அமைக்க போவது யார்….? நடக்கவுள்ள தேர்தல்…. போட்டியிடும் இந்தியர்கள்….!!

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டியிடுகின்றனர்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். அதிலும் கடந்த ஆண்டு அமெரிக்காவில் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றார். மேலும் அந்நாட்டின் பல உயர்ந்த பதவிகளிலும் இந்தியர்களை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். இதே போன்று கனடா அரசியலிலும் இந்தியர்கள் பொறுப்பு வைக்கின்றனர். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஜஸ்டின் வெற்றி பெற்றார். அவருடைய பதவிக்காலம் வரும் 2023 ஆம் ஆண்டு நிறைவடைகிறது.

இருந்த போதிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்துள்ளார். இதன் படி தேர்தலானது நாளை நடைபெறவுள்ளது. மேலும் எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இந்தியா வம்சாவளி வேட்பாளர்கள் 49 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதில் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் 16 பேர், லிபரல் கட்சியில் இருந்து 15 பேர், ஜக்மீத் மிங்கின் புதிய ஜனநாயக கட்சி சார்பில் 12 பேர் மற்றும் மக்கள் கட்சி சார்பில் 6 பேரும் போட்டியிடுகின்றனர். குறிப்பாக கனடாவில் தற்போது கொரோனா தொற்று மூன்றாவது அலை பரவிக் கொண்டிருந்த போது மக்களுக்கு தடுப்பு ஊசிகளை செலுத்தி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதனை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார்.

இதனால் மக்களிடையே அவருக்கு இருந்த நன்மதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்க வேண்டிய தேர்தலை தற்பொழுது நடத்துகிறார் என்று லிபரல் கட்சியின் சார்பில் கூறப்பட்டது. ஆனால் உண்மையான காரணம் இதுவல்ல வேறு. அது என்னவென்றால் கடந்த தேர்தலில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டியிருந்தது. மேலும் ஒவ்வொரு விஷயங்களிலும் அந்த சிறிய கட்சிகளுடன் இணைந்து தான் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. அதனை தவிர்க்கவே தனித்து பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்காகவே தற்போழுது தேர்தல் நடத்தப்படுகிறது.

Categories

Tech |