பள்ளி மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் உறவினர்கள் அவரை தேடி வருகின்றனர்.
கனடாவில் Madison Roy-Boudreau என்ற 14 வயதுடைய மாணவி கடந்த மே மாதம் 11 ஆம் தேதி பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் Madison Roy-Boudreau பலமுறை நிலம் வழியாகவும், வான் வழியாகவும் தேடி வந்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அதனால் Madison Roy-Boudreau கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அந்த சதேகத்தின் அடிப்படையில்தான் போலீசார் தற்போது விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து Madison Roy-Boudreau காணாமல் போன அன்று ட்ரக் ஒன்றில் ஏறிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. அதன் பேரில் அந்த ட்ரக்கை கைப்பற்றியுள்ளனர். பின்னர் போலீசார் அந்த ட்ரக்கின் டிரைவரான 42 வயதுடைய Steven Laurette என்பரை இந்த வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் இந்த வழக்கின் குற்றவாளி Steven Lauretteதான் என்பது குறித்து காணாமல் போன மாணவியின் தந்தை எதுவும் கூறவில்லை. இதனையடுத்து போலீசார் ஒருபுறம் விசாரணை நடத்தி வந்தாலும் Madison Roy-Boudreauன் தந்தை தினமும் காரை எடுத்துக்கொண்டு வனப்பகுதியில் மகளைத் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து Madison குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுவதாவது “நாங்கள் இன்னும் நம்பிக்கையோடுதான் உள்ளோம். போலீஸ் Madison கொலை செய்யப்பட்டதாக கூறினாலும் அதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருநாள் அவள் வீட்டுக்கு வருவாள் என்று நாங்கள் நம்புகிறோம். அது நடக்காது என்று எங்கள் ஆழ்மனது கூறுவதை மறுப்பதற்கில்லை” என கூறியுள்ளார்.