தன் நண்பருடன் ஊருக்கு சென்ற போது காணாமல் போன 15 வயது சிறுமியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
டென்பி பகுதியை சேர்ந்த காணாமல் போன ரோசி சுவர்னா உமினோசி என்ற 15 வயது சிறுமியை போலீசார் கண்டுபிடித்ததை உறுதிப்படுத்தினர் .இதுகுறித்து போலீசார் கூறும்போது , ” 15 வயதான ரோசி என்ற டென்பி பகுதியில் இருந்து தன் நண்பருடன் பேருந்தில் லண்டனுக்கு சென்றுள்ளார். அப்போது லண்டனுக்குச் சென்றதும் இருவரும் பிரிந்து சென்றுள்ளனர் .இதனையடுத்து சிறுமி ரோசி மாயமானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ,சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டு நாங்கள் வந்தோம் . இந்நிலையில் சிறுமி பிர்மிங்காம் பகுதிக்கு சென்றிருக்கலாம் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி நாங்கள் அங்கு சென்று தேடி சிறுமியை கண்டுபிடித்தோம் “என்று கூறினர் .