கர்நாடகாவில் 65 வயதுள்ள ஒருவரை இளம்பெண் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சந்தேமவத்துர் கிராமத்தில் மேகனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய மேகனாவின் கணவர் மீண்டும் வரவில்லை. இதனையடுத்து தன் கணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் மேகனா தனியாக வாழ்ந்து வந்தார். இதனையடுத்து தான் தனியாக இருப்பதை உணர்ந்த மேகனா 2-வது திருமணம் செய்ய முடிவை எடுத்தார்.
இந்நிலையில் மேகனாவுக்கும் சிக்கதனேகுப்பே கிராமத்தில் வசிக்கும் 65 வயதுடைய சங்கரண்ணா என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இதனால் மேகனா, சங்கரண்ணா ஆகிய இருவரும் அந்த கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் அவர்களின் இரு குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். இவ்வாறு நடைபெற்ற சங்கரண்ணா- மேகனாவின் திருமண புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்து அவர்களுக்கு ஆதரவாக பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் வயதானவரை திருமணம் செய்ததாக மேகனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.