Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கனமழை எதிரொலி” கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

கனமழை எதிரொலியின் காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது.

கடந்த சில தினங்களாக பெய்து வரக்கூடிய பலத்த மழையின் காரணமாக காய்கறிகளின் விளைச்சலானது பாதிக்கப்பட்டடது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகமாகியது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை அதிகபட்சமாக ஒரு கிலோ 150 ரூ வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் காய்கறிகளின் விலையானது அதிகமாகியது. இதனிடையில் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, தாளவாடி, நீலகிரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆனால் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையால் மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து குறைந்தது. இதனால் தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதேபோன்று கத்தரிக்காய் விலையும் அதிகமாகி ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் (1 கிலோ) அதாவது,

1. வெண்டைக்காய் 75 ரூபாய்

2. முருங்கைக்காய் 150 ரூபாய்

3. மிளகாய் 80 ரூபாய்

4. பீர்க்கங்காய் 70 ரூபாய்

5. முள்ளங்கி 70 ரூபாய்

6. பாகற்காய் 70 ரூபாய்

7. இஞ்சி 60 ரூபாய்

8. கேரட் 60 ரூபாய்

9. முட்டைக்கோஸ் 35 ரூபாய்

10. புடலங்காய் 70 ரூபாய்

11. சின்ன வெங்காயம் 30 ரூபாய்

12. அவரைக்காய் 90 ருபாய்

13. பெரிய வெங்காயம் 35 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

Categories

Tech |