Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. செம்பரம்பாக்கம் ஏரியில் உபநீர் திறப்பு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் நீர் தேக்கங்களிலிருந்து உபநீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த உள்ளது.

எனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் உயரம் 20.15 அடியும், நீர்வரத்து 1510 கன அடியும், நீர் வெளியேற்றம் 500 கான அடியாகவும், மொத்த கொள்ளளவு 2641 மில்லியன் காண அடியாக இருந்தது. அதனை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரி நீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு இன்று மாலை 3 மணிக்கு 1000 காண அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அறிவித்தார்.

 

Categories

Tech |