Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்யும் கனமழை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மீட்புப் படையினர்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.

வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள, தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது.

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு குழுவும், மதுரை மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும் அனுப்பப்பட்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து அரக்கோணம் நகரிகுப்பத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒரு குழுவிற்கு 15 முதல் 20 வீரர்கள் என மொத்தமாக நான்கு குழுக்கள் அதிநவீன மீட்பு கருவிகளுடன் மீட்புப் படை வாகனத்தில் சென்றுள்ளனர்.

Categories

Tech |