Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இடிந்து விழுந்த கொட்டகை…. பரிதாபமாக போன உயிர்கள்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

திடீரென பெய்த பலத்த கனமழையால் கொட்டகை இடிந்து விழுந்து 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சம்பத்ராயன்பேட்டை புது தெருவில் மார்கபந்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது ஆடுகளை கட்டி வைக்க வீட்டிற்கு அருகாமையில் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைதிருந்திருகிறார். அதன்பின் தொடர் கனமழை காரணத்தினால் கொட்டகை வலுவிழந்து எதிர்பாராமல் இடிந்து கீழே விழுந்துள்ளது. இதில் குட்டி உள்பட 7 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன், ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோர் அங்கு சென்று கொட்டகை இடிந்து ஆடுகள் இறந்து கிடந்ததை பார்வையிட்டுள்ளனர். இதனை அடுத்து கரியாகுடல் அரசு கால்நடை மருத்துவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பிரேத பரிசோதனை செய்து நெமிலி தாசில்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஏழு ஆடுகள் இறந்ததால் அதை நம்பிப் பிழைப்பு நடத்தி வரும் மார்கபந்துவின் குடும்பத்திற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆதலால் மார்கபந்துவிற்கு நிவாரண தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |