சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் தெருக்கள் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. இதனையடுத்து காற்றின் வேகத்தை தாங்க முடியாததால் மாத்தூர் கிராமத்தில் வசிக்கின்ற ராமகண்ணு என்பவரின் நிலத்தில் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளது.
இதனை போல் மாயம்பாடி மற்றும் பொட்டியம் பகுதிகளில் வாழைமரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வருத்தத்தில் இருக்கின்றனர். இதனையடுத்து சேதமடைந்த வாழை மரங்களை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.