தொடர் கனமழையால் சூறைக்காற்று வீசியதினால் பெரிய அரசமரம் கீழே வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் திடீரென பலத்த காற்று விசிய காரணத்தினால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் குடை பிடித்துக்கொண்டும் மற்றும் நனைந்து கொண்டே சாலையில் செல்வதை காணமுடிகிறது. இதனை அடுத்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றுள்ளது.
இதில் இந்திரா நகரில் இருக்கும் பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்ததால் அருகாமையில் இருந்த வீடுகள், மின்கம்பம் மற்றும் கோவில்கள் சேதமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மரம் சாய்ந்த காரணத்தினால் அப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.