கனமழை காரணத்தினால் சாலையோரங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற எம்.எல்.ஏ செந்தில்குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஆவாரம் குப்பம் உள்பட 5 பகுதிகளில் செல்கின்ற பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்பின் நகர் பகுதிகளிலும் கனமழை பெய்த காரணத்தினால் பல இடங்களில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இது குறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ செந்தில்குமார் நேரில் சென்று பொக்லைன் எந்திரம் மூலமாக அடைப்புகளை சீரமைத்து தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.