Categories
மாநில செய்திகள்

கனமழையால் வெள்ளம்…. 27 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு… அதிகரித்த பலி எண்ணிக்கை….!!

அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 105 நபர்கள் உயிரிழந்தனர்.

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அசாமில் உள்ள 26 மாநிலங்களில் இருக்கின்ற மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இச்சம்பவம் பற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண்மை கழகம் அறிவித்துள்ள செய்தி குறிப்பில், அசாம் மாநிலமானது வெள்ள நீரால் முழுவதுமாக சூழப்பட்டிருக்கிறது. மேலும் வீடுகள் கட்டிடங்கள் குடியிருப்புப் பகுதிகள் பயிர்கள் சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற இடங்களில் முழுவதுமாக வெள்ளநீர் சூழ்ந்திருக்கின்றது.இத்தகைய காரணத்தால் மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்தை விட்டு தஞ்சம் தேடி வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

இதனைப் போன்றே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காசிரங்கா தேசிய பூங்காவில் 90 விலங்குகள் உயிரிழந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நிவாரண பணியானது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் 105 பேர் உயிரிழந்துள்ளனர். 27.64 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக தங்க வைக்க கூடிய பணியானது நடந்து கொண்டிருக்கின்றது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக 649 நிவாரண முகாம்கள் மற்றும் உணவு பொருட்கள் வினியோக மையங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு உள்ளவர்களுக்கு தேவையான அரிசி பருப்பு உட்பட்ட பொருள்கள் வழங்கப்படுகின்றன. கால்நடைகளுக்கான தீவனங்களையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் வெள்ளத்தால் 511 பேர் மீட்க்கப்பட்டிருக்கின்றனர்.

Categories

Tech |