Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை…. திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சி…. கண்டு ரசித்த பொதுமக்கள்….!!

வால்பாறையில் பெய்த கன மழையால் திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் இருந்து கோடைமழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 111 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் ஓரிரு நாட்களில் சோலையாறு மின் நிலையங்கள் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் வால்பாறை சுற்று வட்டார பகுதி முழுவதும் ஒரு மணி நேரம் தொடர்ந்து கன மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதையில் உள்ள வனப்பகுதிகளில் புதிது புதிதாக நீர் வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவிலும் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரக்கூடிய அதிரப்பள்ளி மற்றும் சார்ப்பா நீர் வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதேபோன்று வாட்டர்பால்ஸ் எஸ்டேட் வனப்பகுதியில் திடீரென நீர்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளது.

இந்த நீர்வீழ்ச்சிகளை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் தங்களுடைய செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நெகமம், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து அங்கு பெய்த மழையால் குளிரான காலநிலை நிலவியது. மேலும் வடசித்தூர், காட்டம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளிலும் மதியம் 3 மணி முதல் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Categories

Tech |