ஈஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் விழுந்து சிதறிய இடத்தில் கனமழை பெய்து வருவதால் தேடுதல் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சீன நாட்டில் ஈஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம் கடந்த திங்கட்கிழமை அன்று குன்மிங் நகரிலிருந்து இருந்து குவாங்சூ நகருக்கு புறப்பட்டது. இதனை அடுத்து இந்த விமானம் குவாங்சி மலைப்பகுதியில் செங்குத்தாக விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளனது. இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் இருந்த இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒன்று கிடைத்துள்ளதாகவும் மற்றொன்றை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சேறும் சகதியுமாக காணப்படுவதால் கருப்பு பெட்டியை தேடுதல் பணியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு தற்காலிக சாலைகள் அமைத்து மீட்பு பணியினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.