இடியுடன் கூடிய கனமழையில் மின்னல் தாக்கி சிறுவர்கள், பெண்கள் உட்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள தோர்ஹர் கிராமத்தில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மேலும் இந்த கனமழையானது விடிய விடிய பெய்து கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் அந்த கிராமம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்தன.
இதற்கிடையில் கனமழை காரணமாக மூன்று வீடுகளை மின்னல் தாக்கியது. அதில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட மொத்தம் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கனமழை பாதித்த கிராமத்தில் மீட்புக்குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.