Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவன் இறந்த உடனே உயிரிழந்த மனைவி… கண்கலங்க வைத்த மரணம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை கோட்டைப் பகுதிக்கு அடுத்த முள்ளம் பட்டி ஓல பாளையத்தில் 75 வயதுடைய மாணிக்கம் என்ற பழனிசாமி என்பவரும் அவருடைய மனைவி (71) முத்தம்மாள் என்பவரும் வசித்து வருகின்றனர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உண்டு. இரண்டு மகன்களும் திருமணமாகி வெளியூரில் வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் வயதான தம்பதி அவர்கள் சொந்த ஊரில் வசித்து வந்தனர். கணவர் மாணிக்கம் பாளையத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு நேற்று காலை 10 மணி அளவில் புறப்பட்டுச் சென்றார். திடீரென்று மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பேசப்படுகிறது. அவர் மயங்கிய வேளையில் அந்நேரத்தில் அந்த தோட்டத்தில் யாரும் இல்லாத காரணத்தால் அவர் இறந்து கிடப்பதை யாரும் காணவில்லை.

அவ்வழியே மாலை 6 மணி அளவில் சென்று கொண்டிருந்தவர்கள் அவர் உயிரிழந்ததை கண்டு அவரின் பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணியம் என்பவர்க்கு இச்சம்பவத்தை தெரிவித்தனர். இதையறிந்த சுப்பிரமணியம் இறந்த மாணிக்கத்தின் மனைவியான முத்தம்மாளிடம் கூறியபோது, இதைக்கேட்டு அவரின் மனைவி முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார். கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவமானது  ஓலப்பாளையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |