Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே தகராறு…. ஆத்திரத்தில் வியாபாரி செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சேக்கிழார் நகர், கவி கம்பர் சாலையில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த பிரகாஷ் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது தொடையில் குத்திக் கொண்டார்.

இதனால் பிரகாஷ்க்கு அதிக ரத்தம் வெளியேறியதால் மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி பிரகாஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |