கணவன்- மனைவி தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்விளை பகுதியில் தீஸ்மாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் ஊழியராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து 4 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த தீஸ்மாஸ் தனது வீட்டின் மாடியில் இருக்கும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீஸ்மாஸ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.