கணவன் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோட்டத்தில் சுந்தரம் மற்றும் அவரது மனைவி மோகனம்மாள் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.
அங்கு வந்த வடிவேல் ‘எனது சொத்தை பிரித்து தர முடியுமா? முடியாதா?’ என கேட்டு இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்நிலையில் காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுந்தரம் அவினாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான வடிவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.