Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. கணவன் காவல்நிலையத்தில் சரண்….!!

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலடிப்பட்டி பகுதியில் கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் மகளான மலர்க்கொடி என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் வடக்கன்குளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மலர்க்கொடி குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து ராமச்சந்திரன் தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்தும் அவர் வரவில்லை. இந்நிலையில் மலர்கொடிக்கும் ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மலர்க்கொடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் அருகிலுள்ள கலந்தபனையில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். அந்த வீட்டிற்கும் அந்த வாலிபர் வந்து சென்றுள்ளார். இதனையறிந்த ராமச்சந்திரன் கலந்தபனைக்கு வந்துள்ளார். அப்போது மலர்க்கொடிக்கும் ராமசந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் மலர்கொடியின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதனால் மலர்க்கொடி கழுத்து இறுகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் ராமச்சந்திரன் பணகுடி காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பணகுடி காவல்துறையினர் ராமச்சந்திரனை கைது செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்க்கொடியின் சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |