கடனை திருப்பிக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததால் கணவன்- மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெட்டிக்கடை நடத்தி வந்த நிலையில் தொழிலுக்காக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் ராஜகோபால் வெளியூர் சென்று விட்டார்.
இந்நிலையில் அவருக்கு கடன் கொடுத்த அதே ஊரைச் சேர்ந்த சிலர் ராஜகோபாலின் மனைவி விநாயக லட்சுமி, மாமனார் சின்ன மாரியப்பன், மாமியார் சுப்புலட்சுமி போன்றோரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து சின்ன மாரியப்பன் சுப்புலட்சுமி ஆகிய 2 பேரும் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்தனர். இதனையடுத்து கணவன்- மனைவி இருவரையும் உறவினர்கள் மீட்டு திருத்தங்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.