Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுல ஏதோ மர்மம் இருக்கு…. மனைவிக்கு கிடைத்த தகவல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கணவர் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்லல் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2  மகள்களும், மகன்களும் உள்ளனர். இந்நிலையில்  தர்மலிங்கத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே தர்மலிங்கம் கடந்த 30 வருடங்களாக சின்னதேவபட்டியில் வசிக்கும் தனது அக்காவான பஞ்சவர்ணம் என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தர்மலிங்கம் திடீரென இறந்துவிட்டதாக பஞ்சவர்ணம்  சிவகாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த சிவகாமி தனது கணவர் சாவில் ஏதோ மர்மம் இருப்பதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லல் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |