கணவர் தனது காதல் மனைவிக்காக வழங்கியுள்ள புதுவிதமான பரிசினை மக்கள் அனைவரும் கூட்டமாக வந்து காண்கின்றனர்.
உலகத்தில் காதல் இன்றி வாழும் மனிதர்களே கிடையாது. அனைவரிடத்திலும் காதல் ஒவ்வொரு உருவத்தில் உள்ளது. மேலும் காதலுக்கு வயது மற்றும் எல்லையே இல்லை. அதிலும் காதலுக்காக பலர் நினைவு சின்னங்களை எழுப்பியுள்ளனர். சான்றாக ஷாஜகான் தனது ஆசை காதலி மும்தாஜ்க்கு காதல் பரிசாக தாஜ்மஹாலை கட்டினார். அதேபோன்று ஒரு கணவன் தனது மனைவிக்கு புதுவிதமான பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
போஸ்னியா ஏர்செகோவினா நாட்டில் இருக்கும் சேர்பாக் நகரில் 73 வயதான வொஜின் குஷிக் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தன் காதல் மனைவியின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக சுழலும் வீட்டை கட்டி அதனை அவருக்கு பரிசாக அளித்துள்ளார். இந்த வீடானது 360 கோணத்தில் சுழலும் தன்மை உடையது. மேலும் இது வேகமாக சுழற்றினால் 22 நொடிகளில் வீட்டை சுற்றி முடிக்கும்.
ஒருவேளை மெதுவாக சுழற்றினால் ஒரு முறை சுற்றுவதற்கு 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். குறிப்பாக தேவைக்கேற்ப இதனை மாற்றிக்கொள்ளலாம். இந்த வீட்டை தனது அன்பு மனைவிக்காக பார்த்து பார்த்து குஷிக் கட்டியுள்ளார். இதை தனியாக கட்டி முடிக்க அவருக்கு சுமார் 6 ஆண்டுகள் ஆகின. இந்த வீடானது அப்பகுதியில் உள்ள அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இதனை சுற்றிப்பார்ப்பதற்காக நாள்தோறும் மக்கள் கூட்ட கூட்டமாக வருகின்றனராம்.