Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியை திட்டிய கணவன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாணாபாடி கிராமத்தில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் பிரியா தனது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

அதன்பின் தனது மகனை பார்ப்பதற்காக பிரியா கணவரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது பிரியாவை அவரின் கணவன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியா தனது தாய் வீட்டிற்கு வந்து உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |