அம்மிக் கல்லால் கணவனை கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள குச்சிபாளையம் காலனி தெருவில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஹோட்டலில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் 4 வருடங்களுக்கு முன்பாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அதன்பின் மனைவியை பார்ப்பதற்காக இளையராஜா வந்த நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளையராஜாவின் மனைவி அனிதாவிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளையராஜா கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அனிதா அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது, இளையராஜாவின் சித்தப்பா மகன் ஜெயபால் என்பவருக்கும் அனிதாவுக்கும் கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
பின்னர் இளையராஜாவை அனிதா அவரின் கள்ளகாதலன் ஜெயபாலுடன் சேர்ந்து அம்மி கல்லால் சரமாரியாக தாக்கி கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அனிதாவை காவல்துறையினர் கைது செய்து ஜெயபாலை வலைவீசி தேடி வருகின்றனர்.