கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு தெரு பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நித்யா என்ற மனைவியும், ஒரு மகளும் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கீழ்மாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் கோவிந்தராசுக்கும், நித்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி ஜெகதீசன் வீட்டில் இல்லாத சமயத்தில் நித்யாவும் கோவிந்தராசுவும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதன் காரணத்தால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் ஜெகதீசை கொலை செய்வதற்கு மனைவி நித்யா திட்டம் தீட்டியுள்ளார். இது குறித்து தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்த போது கோவிந்தராசுவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கள்ளக்காதல் சம்பந்தமாக கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டால் நித்யா தனது கள்ளக்காதலனை வரவழைத்து அவருடன் சேர்ந்து கணவன் ஜெகதீசை மண்வெட்டியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
இதில் ஜெகதீசன் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைப் பார்த்த அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகதீசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணவனை கொலை செய்து விட்டு தப்ப முயற்சி செய்த மனைவியை கைது செய்துள்ளனர். பின்னர் தப்பிச்சென்ற கள்ளக்காதலன் கோவிந்தராசுவை தனிப்படை காவல்துறையினர் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.