Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகனை தாக்கிய தொழிலாளி…. மனைவியின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது போதையில் மகனை தாக்கிய தொழிலாளியை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொற்கை கிராமத்தில் தொழிலாளியான மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் மகாதேவன் வீட்டிற்கு அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மகாதேவன் மனைவியிடம் பணம் வாங்கி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது மூத்த மகன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாதேவன் மது பாட்டிலை எடுத்து மகனை தாக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா தனது கணவரை தடுக்க முயன்றபோது மகாதேவன் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து தனது மனைவி அமுதாவை வெட்ட வந்துள்ளார்.

இதனை சுதாரித்துக்கொண்ட அமுதா தனது கணவர் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி அவரது கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த மகாதேவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அமுதா மணல்மேடு காவல் நிலையத்திற்கு சென்று தன் கணவனை கொன்றதாக சரணடைந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அமுதாவை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மகாதேவனின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |