அமெரிக்காவிலிருந்து மனைவி, குழந்தைகளை பார்க்க வீடு திரும்பிய கணவரை கொரோனா காரணமாக வீட்டிற்குள் விடாமல் தடுத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு கேரள மாநிலம் வெள்ளிமலை வாழ்வினை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு தற்போது குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் பாஸ்கரன் குடும்பத்தினரை கேரளாவில் விட்டுவிட்டு, அமெரிக்காவிற்கு வேலை பார்க்க சென்றுள்ளார். அதன் பின்னர் சிறிது நாட்கள் கழித்து, மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மனைவியின் குடும்பத்தினர் கொரோனா காரணமாக அவரை வீட்டிற்குள் விடாமல் பல மணி நேரம் கெஞ்ச வைத்துள்ளனர்.
அதன் பின்னர் பாஸ்கரன் தன் மனைவியின் பெயரை அழைத்து என்னை உள்ளே விடு என்று கெஞ்சியுள்ளார். அதனை கண்ட சிலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும், அவரின் மனைவி வீட்டிற்குள் அனுமதிக்க வில்லை. அதனால் விரக்தியடைந்த பாஸ்கரன் கார் மூலமாக மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.