Categories
உலக செய்திகள்

கனவில் வந்த நம்பர்கள்…! மனைவியிடம் புலம்பிய கணவன்…! இறுதியில் அடித்த அதிர்ஷ்டம்… குடும்பமே கொண்டாட்டம்..!!

கணவரின் கனவில் தோன்றிய எண்ணில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லயன் டாலர் பரிசு விழுந்துள்ளது.

1980-ஆம் ஆண்டு Deng Pravatoudom என்ற பெண் லாவோஸிலிருந்து இருந்து கனடாவுக்கு  தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்து உள்ளார்.பல ஆண்டுகளாக Deng Pravatoudom அவரது கணவரும் தனது குடும்பத்தினருக்காக கடுமையாக உழைத்துள்ளனர். இதற்கிடையில்  20 வருடங்களுக்கு முன்பு Pravatoudom-ன்  கணவரின் கனவில் அடிக்கடி ஒரு லாட்டரி எண் தோன்றியுள்ளது. தனது கனவில் வந்த எண்ணை அவர் Pravatoudom கூறியுள்ளார். இதனால் Pravatoudom நம்பிக்கையுடன் அவர் கணவரின் கனவில் வந்த அதே எண்ணில் லாட்டரி சீட்டுகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் Deng Pravatoudom நம்பிக்கையும் அவரது கணவரின் கனவும்  தற்போது உண்மையாகிவிட்டது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மிகவும் வறுமையில் வாடிய அந்த குடும்பத்திற்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது.”Ontario Lottery and Gaming” என்ற லாட்டரியில்  Deng Pravatoudom-ற்கு  60 மில்லியன் டாலர் பரிசாக விழுந்துள்ளது.  இதுகுறித்து அவர் கூறும் பொழுது “முதலில் கடன்களை அடைத்து விட்டு எனது குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். அதற்கு பிறகு எனக்கு தேவையான வைரங்களை வாங்குவேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |