Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாரமா இருக்க விரும்பல” கணவனின் விபரீத முடிவு…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாவூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் அதனை கண்ட பொதுமக்கள் நபரை விலகிச் செல்லும்படி சத்தமிட்டனர். ஆனால் அந்த நபர் ரயில் வரும் திசையை நோக்கி எதிரே வேகமாக சென்றதால் ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரைட், குமார் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் குலசேகரன்புதூர் ராமபுரம் தெற்கு தெருவில் வசித்து வந்த பெனடிக்ட் ஜோதி என்பது தெரியவந்துள்ளது. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இதன் இடையில்  தற்கொலை செய்த பெனடிக்ட் ஜோதியின் சட்டையில் ஒரு கடிதம் இருந்தது. அதில் “எனது பெயர் பெனடிக்ட் ஜோதி. எனக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. ஆனாலும் எனது மனைவி என்னை அன்புடன் நன்றாக கவனித்து வந்துள்ளார். நான் எனது மனைவியை மேலும் பாரம் கொடுத்து துன்புறுத்த விரும்பாததால் எனது உயிரை மாய்த்துக் கொள்ள தற்கொலை முடிவை எடுத்துள்ளேன். நான் எனது மனைவியை மிகவும் விரும்புகிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Categories

Tech |