கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரமணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் வழியாக நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகில் வந்தபோது எதிரே வந்த குலசேகரநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகப் பெருமாள் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகப்பெருமாளை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆறுமுகப்பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆறுமுகப் பெருமாளின் மனைவி பார்வதி கணவரின் பிரிவை தாங்க முடியாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பார்வதி வீட்டில் உள்ள கழிவறையில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.