Categories
இந்திய சினிமா சினிமா

கணவர் இறந்து விடுகிறாரா.?..இல்லையா.?..திகில் வெப் சீரியலில் நடிக்கும் பிரியாமணி என்ன சொல்கிறார்…!!

நடிகை பிரியாமணி தற்போது திகில் கதைக்களத்தை கொண்ட ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். 

நடிகை பிரியாமணி நடித்து பாராட்டுகளை பெற்ற வெப் தொடர் ‘தி பேமிலிமேன்’ ஆகும்.  இதில் அவர் நடித்தது டிஜிட்டல் தள ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றார். இப்பொழுது அவர் அதீத் என்ற மற்றொரு வெப் தொடரிலும் நடித்து கொண்டிருக்கிறார். இந்த தொடரில் அவரின் கதாபாத்திரம் ராணுவ அதிகாரியின் மனைவியாக நடிக்கிறார்.

இத்தொடர் பற்றி நடிகை பிரியாமணி கூறுவது;

அவரது கணவனான இராணுவ அதிகாரி போரில் இறந்து விட்டார் என கூறுகின்றனர். ஆனால் அவர் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தன் குடும்பத்தோடு புதிய வாழ்க்கையை தொடங்க உயிரோடு வருகிறார். அப்பொழுது அவரது மனைவி, குழந்தைகளின் நிலைமை என்ன.? இந்த இராணுவ அதிகாரி இறந்து விட்டதாக கூறப்பட்டதன் பின்னணிதான் என்ன.? இவ்வாறான கதைகளை மையமாக கொண்டு ஒரு புதிய திகில் தொடராக உருவாகிறது.

இது மட்டுமல்லாமல் இந்தி மொழியில் நடிகர் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக “மைதான்” என்னும் படத்தில் நடித்து வருவதாகவும், அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் பிரியாமணி கூறினார். 2013ம் ஆண்டு வெளியான, ஷாருக்கான் நடித்திருந்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாட்டிற்கு நடனம் மட்டும் ஆடியுள்ளேன். தெலுங்கு மொழி சினிமாவில் வெங்கடேஷ், ராணா உள்ளிட்டோர் படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறேன். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்று அவர் கூறினார்.

 

 

Categories

Tech |