Categories
தேசிய செய்திகள்

கணவர் கண் எதிரே மனைவியை கொன்ற கொள்ளையர்கள்…. பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வந்தவர் நடிகை ரியாகுமாரி. இவருடைய கணவர் பிரகாஷ் குமார் படத் தயாரிப்பாளர் ஆவார். இந்த தமபதியினருக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர்கள் காரில் கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, பக்னன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மகிஷ்ரேகா எனும் இடத்தில் காரை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள மறித்தனர். இதையடுத்து பிரகாஷ் குமாரை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் ரியாகுமாரியை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். பின் ரத்தவெள்ளத்தில் கிடந்த ரியாகுமாரியை அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதித்தார். எனினும் ரியாகுமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு அருகில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதனிடையில் குமாரியின் குடும்பத்தினர் பிரகாஷ் குமார் மற்றும் அவரது முன்னாள் மனைவி, அவரது 2 சகோதரர்கள் ஆகியோர் மீது புகாரளித்துள்ளனர். இந்நிலையில் ரியாவின் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |