Categories
தமிழ் சினிமா தற்கொலை

சித்ரா தற்கொலை வழக்கில் ஆதாரம் சிக்கிவிட்டது… போலீஸ் பரபரப்பு தகவல்…!!!

நடிகை சித்ரா தற் கொலை செய்ததற்கான காரணம் அவரது கணவர் தான் என்று செல்போனில் அளிக்கப்பட்ட ஆதாரம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் தான் தற்கொலை செய்வதற்கு தூண்டி உள்ளதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத் பெற்றோர் ஆகியோரை விசாரித்த ஆர்.டி.ஓ தற்பொழுது சிறையில் இருக்கும் ஹேம்நாத்தையும் விசாரிக்க உள்ளார்கள். தற்போது புதிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.அதில் சித்ராவும் ஹேம்நாத்தும்  ஒரு பிறந்த நாள் விழாவிற்கு சென்று இருந்தபோது தான் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

சித்ரா நாடகத்தில் நெருக்கமாக சில காட்சிகளில் நெருக்கமாக  நடித்ததுதான் ஹேம்நாத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சித்ராவிடம் இனி இதுபோல் நீ யாருடனும்  நெருக்கமாக நடிக்க கூடாது என்று ஹேம்நாத் சண்டை இட்டுள்ளார். இதை அடுத்து சித்ரா ஹேமநாத், தன் மீது சந்தேகம் அடைவதாக ஹேம்நாத்தின் தந்தையிடம் தொலைபேசியின் மூலமாக கூறி உள்ளார்.

அந்த அழைப்பு செல்போனில் அழிக்கப்பட்டு இருந்த நிலையில் செல்போன் சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தபோது இந்த தகவல் வெளியே வந்தது. இதனால் செல்போனை ஆதாரமாகக் கொண்டு ஹேம்நாத் தான் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது என போலீசார்  கூறுகின்றனர். இதில் ஹேம்நாத் ஏற்கனவே வேறொரு பெண்ணை காதலித்து பிரிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |