Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவரின் இறப்பிற்கு நியாயம் வேண்டும்… துணி வியாபாரி வீட்டை கணவர் சடலத்துடன் முற்றுகையிட்ட பெண்….!!

கணவரின் இறப்பிற்கு நியாயம் கேட்டு துணி வியாபாரி வீட்டை பெண் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குஸ்தம்பள்ளி  பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திம்மனமுத்தூரை  சேர்ந்த துணி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் வெங்கடேசனிடம் வந்து துணி வியாபாரத்தில் நன்கு  பணம் சம்பாதிக்கலாம் என்று  அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய வெங்கடேசன் கடந்த மாதம் 14ஆம் தேதி புருசோத்தமனுடன் விஜயவாடாவுக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்ற பிறகு தனக்கு உணவு கொடுக்காமல் புருசோத்தமன் கொடுமைப்படுத்துவதாக தனது மனைவி அஞ்சலியிடம் வெங்கடேசன் செல்போனில் கூறி அழுதுள்ளார்.  இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஞ்சலி 31ஆம் தேதி விஜவாடாவுக்கு சென்று வெங்டேஷனை திருப்பத்தூருக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென வெங்கடேசன் இறந்துவிட்டார். இதனால் அஞ்சலி  தனது கணவனின் உடலை புருஷோத்தமனின் வீட்டிற்கு முன்பு வைத்து தன்னுடைய குழந்தைகளுடன் கணவரின் இறப்பிற்கு நியாயம் கேட்டு முற்றுகையிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசனின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக அஞ்சலி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |