Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்டித்து பேசிய மனைவி…. ரயில்வே ஊழியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தில் தலைவைத்து ரயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள வாழவந்தாள்புரம் வடக்குத் தெருவில் சந்திரன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் சந்திரன் செங்கோட்டை ரயில்வேயில் சீனியர் டெக்னீசியனாக கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகின்றது. இந்நிலையில் சந்திரன் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றித் திரிந்ததால் அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சந்திரன் செங்கோட்டை-ராஜபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்.

இதனையடுத்து அவ்வழியாக மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு சென்ற பயணிகள் ரயில் சந்திரன் மீது ஏறியதால் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |